ஆர்த்திகர்களுக்காக முதலில் வணக்கம்... நார்த்திகர்களுக்கு நான் கொஞ்சம் சுனக்கம்... பரபரப்பா போய்கிட்டு இருக்கு காவி உடைதரித்த பாவிகளின் சல்லாபங்கள். அனைத்து ஊடகங்களும் இதைப் பற்றி எழுதி, பேசி, காட்டி முடித்துவிட்டது.
ஆனாலும் அந்த அதிர்வு இன்னும் நம் மனதை விட்டு அகளவில்லைதான்... என்னுடைய பங்குக்கும் நானும் கொஞ்சம் எழுதிவிடலாம் என்று...
பிரேமானந்தா தொடங்கி... சங்கராச்சாரியார்... நித்தியானந்த முதல் கல்கிபகவான் வரை பாவியாகிவிட்ட பின்னும் நம்மக்கள் இன்னுமே இவர்கள் மீது பக்தியையும் மரியாதையையும் வைத்திருக்கிறதைப் பார்த்தால், பிழை இந்த பாவிகளுடையது அல்ல என்கின்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்...நித்தியானந்தாவை முதலில் எடுத்துக்கொண்டால் அவர் ஒரு பிரம்மச்சாரி... மன்னிக்கவும் அபச்சாரி.... அவிச்சாரி... இவருடைய வேலை பிரச்சரியத்தை போதிப்பது... அப்படியிருக்க இவராலேயே பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க முடியவில்லை...
அடுத்து அவதாரம்...
ஓ.... பகவத் கீதையில் பகவான் கிர்ஷனர் சொன்னாரே... சம்பவாமி யுகே... யுகே... என்று. தர்மம் தோற்று அதர்மம் தலைதூக்கும் போது நான் பிறப்பெடுப்பேன் என்று... பார்க்கப்போனால் அதர்மம் தான் புதிதாக பிறப்பெடுத்திருக்கிறது...
அது சரி... தனே தான் அவதாரம் என்று சொல்லிக்கொள்வதை அடுத்தவர் நம்புவது யார் குற்றம்...
காலை பிடிக்க ஒரு தொகை... கையை பிடிக்க ஒரு தொகை... பூவை எடுக்க ஒரு தொகை... பஜனையில் கலந்துகொள்ள ஒரு தொகை... தீர்த்தம் பெற ஒரு தொகை... மாங்காய் சாப்பிட ஒரு தொகை... இப்படி தொகைகளை கொட்டி கடவுளை காண வேண்டுமா மானிடனே...
கடவுளுக்கு நீ கொடுக்க தேவையில்லை... கடவுள் உனக்கு கொடுக்க வேண்டும்... இனியாவது புரிந்துகொள் மானிடனே...
இனியாவது திருந்துவோம்... பாவிகளையும் திருத்துவோம்... நித்தியானந்தாக்களையும்... பகவான்களையும்... எதிர்த்து கொஞ்சமாவது கேள்விகனைகளைத் தொடுப்போம்... பின்நவீனத்துவ வாதிகளிடம் ஒரு கேள்வி... இந்த மூட நம்பிக்கை... ஆர்த்திகம் நார்த்திகம் பின் நவீனத்தவத்தற்குள் அடங்காதா... அதை எதிர்த்து கேள்விகள் கேட்கப்படாதா... படக்கூடாதா...
காசு கொடுத்தால்
கடவுளைக் காண
வழி காட்டுவதாய்
தானே பேச்சு
பிறகு எதற்கு
கற்பையும் கேட்கின்றாய்



