Friday, April 16, 2010

ச்சீச்சீச்சீ

உங்களுக்கு எதிர்ப்புகள் உண்டா என்று கேட்டால் யாரும் மறுக்கப்போவதில்øல. எல்லோருக்குமே இருக்கத்தான் செய்யும். ஆனா அதன் விகிதமும்வடிவமும்தான் வேறுபடுகிறது.எப்படி நமக்கு ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லையோ, அப்படியே நம்மைச் சுற்றி இருப்பவர்களின் உணர்வுகளும் ஒன்றாக இருப்பதில்லை.உங்களிடம் யாராவது எதிர்ப்ப காட்றாங்கன்னு புரிஞ்சிக்கிட்டிங்கன்னா அதஉடனேயே சரிக்கட்டிட்டீங்கன்னா பிரச்சினையே இல்லப்பாருங்க.அத செய்யாம நாம என்ன செய்றோம். எதிர்ப்புக் காட்றவங்கள சீண்டிக்கிட்டே இருப்போம்.அப்போ எதிரிகள் இன்னும் பெருத்துப் போவாங்களேத் தவிர வேறுஒன்றும் ஆகப்போரதில்லை.நீங்க உங்கட வாழ்க்கை வண்டிய சிறப்பாக கொண்டுபோய்க்கிட்டுஇருக்கப்போ இவர்கள் குறுக்கே வந்து நிப்பாங்க.நம்மல கவிழ்க்க நினைக்கிறவங்களுக்கு ஐயா சாமி நான் உன் எதிரியில்லை என்கிறத எப்படிசரி அவர்களுக்கு விளங்கப்படுத்திட்டீங்கன்னாஅதுவும் உங்கட வெற்றிக்கு உதவும்.சே...! இது என்ன கேவலமான வேலை என்கிறீர்களா?எதிர்ப்பைச் சமாளிக்க இருக்குற எத்தனையோ வழிகளில் இதுவும் ஒன்னுங்க.யானைக்குத் தந்த பலத்தை இயற்கை நரிக்குத் கொடுக்கல்ல. ஆனாநரிக்கு தந்திரத்தைக் கற்றுக் கொடுத்திருக்குது. வேட்டுவைக்க இந்த தந்திரத்தவிட சிறந்த ஆயுதம் இல்லைங்க.நம்மோட ஒரே தொழிலில் இருப்பவர்களை எதிரிகளாக நினைப்பவர்களும்இருக்குறாங்க. இது எதிர்ப்பாக கருதக்கூடாது.அப்ப...இத நீங்க போட்டியாக எடுத்துக்கலாம்.போட்டிதான் ஒருத்தன் வாழ்க்கையில உயரவேணுமுங்குற உத்வேகத்தத் தர்றது.நம்ம வெற்றியும் தோல்வியும் நம்மைச் சுத்தி இருக்கிறவங்கள வச்சித்தான்இருக்கு. அவங்கள மைல் கல்லாக பயன்படுத்துறதும், தடைக் கற்களாக ஆக்கிக்கொள்றதும் நம்ம அணுகுமுறையிலதாங்க இருக்கு.எதிர்ப்ப பத்தியும் வாழ்க்கையப்பத்தியும் கவிப்பேரரசு அழகா சொல்றாருபாருங்க...எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்.பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை.துயரங்களை ஜீரணித்துவிடுங்கள்.தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல் தருகின்றனமரங்கள்.அவசரப்படாதீர்கள்அங்கீகாரம் அவ்வளவு எளிதில்லை.இங்கே மலர்களுக்குத்தான் முதல் மரியாதை.வேர்கள் வெளிவருவதேயில்லைதோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல.தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.சுறுசுறுப்பாயிருங்கள்.ஓடிக் கொண்டேயிருக்கும் நீரில்தான் ஒக்ஸிஜன் அதிகம்.எல்லோரையும் மதியுங்கள்.சமுத்திரத்தில் எந்தத்துளி முதல் துளியோ எவருக்குத் தெரியும்.உங்கள் பெருமைகளை நீங்கள் அல்ல ஊர் பேசட்டும்.பூக்களின் புகழ் பரப்பும் பொறுப்பைக் காற்றுத்தானே ஏற்றுக் கொள்கிறது.இந்த உலகமென்னும் கிண்ணத்தில் இயற்கை இன்பத்தை மட்டுமே ஊற்றிவைத்திருக்கிறது.துன்பம் என்பது அறியாமை.துன்பம் என்பது அறிவின்மை.அறிவில் நிமிருங்கள்.அன்பில் நெகிழுங்கள்.உழைப்பில் உயருங்கள்.பிறகு பாருங்கள்.இந்தப்பூவுலகமே புறாச்சிறகடியில் கண்ணயரும் குஞ்சைப் போல உங்களுக்குக்கதகதப்பாய் இருக்கும்.சரியாத்தானுங்க சொல்லியிருக்காரு வைரமுத்து.உன்னை அளவின்றி புகழ்கிறவன் உன்னை ஏமாற்றிவிட்டான் அல்லது ஏமாற்றப்போகிறான் என்று நான் சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா வாசகர்களே...ஏன் இந்த கேள்வி என்றா எண்ணுகிறீர்கள். அடுத்த இதழில் புகழ்ச்சி பற்றித்தான் எழுதப்போகிறேன். இத்துடன் அடியேன் விடை பெற்றுக்கொள்கிறேன்.

1 comments:

Muszhaaraff Muthunabeen said...

எதிர்த்தல் என்பது ஒரு கலாசார மற்றும் இனப்பிரதிநிதித்துவத்தின் ஆயுதமாக நோக்கப்படும் உலகோர்க்கு எதிர்த்தல் என்பது தனி மனித நலனுக்கும் ஒற்றுமைக்கும் எதிரான முள் வேலி என்பதை இந்தப்பதிவு மிக அண்மித்து புரிய வைக்கிறது. இருந்த போதும் மனிதர்களுக்குள் ஓடுடைத்து தலை காட்டும் குஞ்சு போல திமிரி நிற்கும் நான் எனும் அகங்காரம் எதிர்த்தலுக்கு எண்ணை ஊற்றிக் கொண்டுதான் இருக்கும்.

Post a Comment