Saturday, April 17, 2010

காவி உடையில் சில பாவிகள்..... பகவான்களும் - பக்தி மடையர்களும்

ஆர்த்திகர்களுக்காக முதலில் வணக்கம்... நார்த்திகர்களுக்கு நான் கொஞ்சம் சுனக்கம்... பரபரப்பா போய்கிட்டு இருக்கு காவி உடைதரித்த பாவிகளின் சல்லாபங்கள். அனைத்து ஊடகங்களும் இதைப் பற்றி எழுதி, பேசி, காட்டி முடித்துவிட்டது.
ஆனாலும் அந்த அதிர்வு இன்னும் நம் மனதை விட்டு அகளவில்லைதான்... என்னுடைய பங்குக்கும் நானும் கொஞ்சம் எழுதிவிடலாம் என்று...
பிரேமானந்தா தொடங்கி... சங்கராச்சாரியார்... நித்தியானந்த முதல் கல்கிபகவான் வரை பாவியாகிவிட்ட பின்னும் நம்மக்கள் இன்னுமே இவர்கள் மீது பக்தியையும் மரியாதையையும் வைத்திருக்கிறதைப் பார்த்தால், பிழை இந்த பாவிகளுடையது அல்ல என்கின்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்...
நித்தியானந்தாவை முதலில் எடுத்துக்கொண்டால் அவர் ஒரு பிரம்மச்சாரி... மன்னிக்கவும் அபச்சாரி.... அவிச்சாரி... இவருடைய வேலை பிரச்சரியத்தை போதிப்பது... அப்படியிருக்க இவராலேயே பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க முடியவில்லை...
அடுத்து அவதாரம்...
ஓ.... பகவத் கீதையில் பகவான் கிர்ஷனர் சொன்னாரே... சம்பவாமி யுகே... யுகே... என்று. தர்மம் தோற்று அதர்மம் தலைதூக்கும் போது நான் பிறப்பெடுப்பேன் என்று... பார்க்கப்போனால் அதர்மம் தான் புதிதாக பிறப்பெடுத்திருக்கிறது...
அது சரி... தனே தான் அவதாரம் என்று சொல்லிக்கொள்வதை அடுத்தவர் நம்புவது யார் குற்றம்...
காலை பிடிக்க ஒரு தொகை... கையை பிடிக்க ஒரு தொகை... பூவை எடுக்க ஒரு தொகை... பஜனையில் கலந்துகொள்ள ஒரு தொகை... தீர்த்தம் பெற ஒரு தொகை... மாங்காய் சாப்பிட ஒரு தொகை... இப்படி தொகைகளை கொட்டி கடவுளை காண வேண்டுமா மானிடனே...
கடவுளுக்கு நீ கொடுக்க தேவையில்லை... கடவுள் உனக்கு கொடுக்க வேண்டும்... இனியாவது புரிந்துகொள் மானிடனே...
இனியாவது திருந்துவோம்... பாவிகளையும் திருத்துவோம்... நித்தியானந்தாக்களையும்... பகவான்களையும்... எதிர்த்து கொஞ்சமாவது கேள்விகனைகளைத் தொடுப்போம்... பின்நவீனத்துவ வாதிகளிடம் ஒரு கேள்வி... இந்த மூட நம்பிக்கை... ஆர்த்திகம் நார்த்திகம் பின் நவீனத்தவத்தற்குள் அடங்காதா... அதை எதிர்த்து கேள்விகள் கேட்கப்படாதா... படக்கூடாதா...
காசு கொடுத்தால்
கடவுளைக் காண
வழி காட்டுவதாய்
தானே பேச்சு
பிறகு எதற்கு
கற்பையும் கேட்கின்றாய்

Friday, April 16, 2010

ச்சீச்சீச்சீ

உங்களுக்கு எதிர்ப்புகள் உண்டா என்று கேட்டால் யாரும் மறுக்கப்போவதில்øல. எல்லோருக்குமே இருக்கத்தான் செய்யும். ஆனா அதன் விகிதமும்வடிவமும்தான் வேறுபடுகிறது.எப்படி நமக்கு ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லையோ, அப்படியே நம்மைச் சுற்றி இருப்பவர்களின் உணர்வுகளும் ஒன்றாக இருப்பதில்லை.உங்களிடம் யாராவது எதிர்ப்ப காட்றாங்கன்னு புரிஞ்சிக்கிட்டிங்கன்னா அதஉடனேயே சரிக்கட்டிட்டீங்கன்னா பிரச்சினையே இல்லப்பாருங்க.அத செய்யாம நாம என்ன செய்றோம். எதிர்ப்புக் காட்றவங்கள சீண்டிக்கிட்டே இருப்போம்.அப்போ எதிரிகள் இன்னும் பெருத்துப் போவாங்களேத் தவிர வேறுஒன்றும் ஆகப்போரதில்லை.நீங்க உங்கட வாழ்க்கை வண்டிய சிறப்பாக கொண்டுபோய்க்கிட்டுஇருக்கப்போ இவர்கள் குறுக்கே வந்து நிப்பாங்க.நம்மல கவிழ்க்க நினைக்கிறவங்களுக்கு ஐயா சாமி நான் உன் எதிரியில்லை என்கிறத எப்படிசரி அவர்களுக்கு விளங்கப்படுத்திட்டீங்கன்னாஅதுவும் உங்கட வெற்றிக்கு உதவும்.சே...! இது என்ன கேவலமான வேலை என்கிறீர்களா?எதிர்ப்பைச் சமாளிக்க இருக்குற எத்தனையோ வழிகளில் இதுவும் ஒன்னுங்க.யானைக்குத் தந்த பலத்தை இயற்கை நரிக்குத் கொடுக்கல்ல. ஆனாநரிக்கு தந்திரத்தைக் கற்றுக் கொடுத்திருக்குது. வேட்டுவைக்க இந்த தந்திரத்தவிட சிறந்த ஆயுதம் இல்லைங்க.நம்மோட ஒரே தொழிலில் இருப்பவர்களை எதிரிகளாக நினைப்பவர்களும்இருக்குறாங்க. இது எதிர்ப்பாக கருதக்கூடாது.அப்ப...இத நீங்க போட்டியாக எடுத்துக்கலாம்.போட்டிதான் ஒருத்தன் வாழ்க்கையில உயரவேணுமுங்குற உத்வேகத்தத் தர்றது.நம்ம வெற்றியும் தோல்வியும் நம்மைச் சுத்தி இருக்கிறவங்கள வச்சித்தான்இருக்கு. அவங்கள மைல் கல்லாக பயன்படுத்துறதும், தடைக் கற்களாக ஆக்கிக்கொள்றதும் நம்ம அணுகுமுறையிலதாங்க இருக்கு.எதிர்ப்ப பத்தியும் வாழ்க்கையப்பத்தியும் கவிப்பேரரசு அழகா சொல்றாருபாருங்க...எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்.பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை.துயரங்களை ஜீரணித்துவிடுங்கள்.தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல் தருகின்றனமரங்கள்.அவசரப்படாதீர்கள்அங்கீகாரம் அவ்வளவு எளிதில்லை.இங்கே மலர்களுக்குத்தான் முதல் மரியாதை.வேர்கள் வெளிவருவதேயில்லைதோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல.தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.சுறுசுறுப்பாயிருங்கள்.ஓடிக் கொண்டேயிருக்கும் நீரில்தான் ஒக்ஸிஜன் அதிகம்.எல்லோரையும் மதியுங்கள்.சமுத்திரத்தில் எந்தத்துளி முதல் துளியோ எவருக்குத் தெரியும்.உங்கள் பெருமைகளை நீங்கள் அல்ல ஊர் பேசட்டும்.பூக்களின் புகழ் பரப்பும் பொறுப்பைக் காற்றுத்தானே ஏற்றுக் கொள்கிறது.இந்த உலகமென்னும் கிண்ணத்தில் இயற்கை இன்பத்தை மட்டுமே ஊற்றிவைத்திருக்கிறது.துன்பம் என்பது அறியாமை.துன்பம் என்பது அறிவின்மை.அறிவில் நிமிருங்கள்.அன்பில் நெகிழுங்கள்.உழைப்பில் உயருங்கள்.பிறகு பாருங்கள்.இந்தப்பூவுலகமே புறாச்சிறகடியில் கண்ணயரும் குஞ்சைப் போல உங்களுக்குக்கதகதப்பாய் இருக்கும்.சரியாத்தானுங்க சொல்லியிருக்காரு வைரமுத்து.உன்னை அளவின்றி புகழ்கிறவன் உன்னை ஏமாற்றிவிட்டான் அல்லது ஏமாற்றப்போகிறான் என்று நான் சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா வாசகர்களே...ஏன் இந்த கேள்வி என்றா எண்ணுகிறீர்கள். அடுத்த இதழில் புகழ்ச்சி பற்றித்தான் எழுதப்போகிறேன். இத்துடன் அடியேன் விடை பெற்றுக்கொள்கிறேன்.

ஒரு கோப்பை கசப்பு...

ஒரு வைரம் ஜொலிக்க நன்றாக பட்டை தீட்டப்பட வேண் டும். அதேபோல் ஒருத்தன் அவனோட தளத்துல இருந்து ஜொலிக்க நான்குபேரிடம் திட்டு படவேண்டும்.என்னடா இது தீட்டப்படவேணுங்குறா...திட்டுப்பட வேணுங்குறா... அப்படின்னு நாலுபேரு திட்டுறதும் எனக்கு விளங்குது. ஒருவன் ஜொலிக்க நாலு பேரு திட்டனுமுனு சொல்ற நானேதிட்ரவங்களப் பாத்து திட்டினா எப்படி...என்னடா இப்படி குழப்புறானேன்னு திட்டாதீங்க...இனி உங்களப் பார்த்து திட்ரவங்களப் பார்த்து நீங்க திட்டாதீங்க. இந்தத்திட்டுக்களை வைத்து உங்களை நீங்களே தீட்டிக்கொள்ளுங்கள்.மறுபடியும் குழப்புறானே...மித்திரனுக்காக எதாவது எழுதி தாரேன்னு ஆசிரியருக்கு வாக்குறுதிகொடுத்துட்டேன்.ஆனா என்ன எழுதுறதுன்னுதான் தோனல்ல...சரி யோசிப்போமுன்னு யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போ என் பக்கத்துல வந்த நண்பன் கேட்டான்...என்னடா யோசிச்சுக்கிட்டு இருக்க...ஏதாவது எழுதலான்னு யோசிச்சுகிட்டு இருக்கேண்டா என்றேன்.உடனே ...நீ எல்லாம் எழுதின்னு இழுத்தான். எனக்கு அது திட்ரமாதிரியேஇருந்துச்சு.அதான் திட்ரதவச்சே எழுதலா முன்னு...காய்க்கிற மரம்தான் கல்லடி படுமுன்னு வழக்கமா சொல்லுவாங்க.ஏன்னா ஒருத்தன் வளர்ந்துகொண்டு போறப்பத்தான் அவன பத்தின விமர்சனங்கள் எழும். அது அவனுக்கு சில நேரங்களில் உறுதுனையாஇருக்கும். அதே நேரம் உறுத்துகிற ஆணியாகவும் இருக்கும்.உறுத்துகிற ஆணின்னு நான் சொல்றது அவனைப் புகழ்ந்து எழும்விமர்சனங்களை. என்னடா ஒருத்தன் புகழ்ந்து பேசுறது எப்படி உறுத்துன்ற கேள்வி எழுவது எனக்கு புறியுது.ஒருவன் வெற்றியின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறான். அவனைஇடை நிறுத்தி ஒரு செங்கம்பளத்தை இரண்டு படிகளில் மட்டும் விரித்துவிட்டு இப்போது ஏறிச் செல் என்றால் அவன் ஏறுவானா?நிச்சயம் மாட்டான்.அந்த செங்கம்பலத்திலேயே நின்று விடுவான். அவன் ஏற வேண்டிய படிகளை மறந்து விடுவான்.அதைதான் மேலே ஆணின்னு குறிப்பிட்டேன்.ஒருவனிடம் குறை இருந்தால் அவன் எதிரே பேசு. அவனைபுகழ்வதென்றால் அவனுக்கு பின்னே சென்று புகழ் என்று கூறுவார்கள்.இதைத்தான் இப்படி கூறியிருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.என்னுடைய தொழிலில் எனக்கு நிறை எதிரிகள் இருக்கிறார்கள் என்றுஅலட்டிக் கொள்றவங்கள நாம பாத்திருப்போம்.அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது...உங்களுடன் துரோகிகள் தான் இருக்கூடாது எதிரிகள் தாராளமாக இருக்கலாம். அவர்கள்தான் உங்களை வழி நடத்துவார்கள்.தான் செய்யும் பிழைகளை தன்னை விட தன் நண்பர்களை விட உங்களுடைய எதிரிகள் நன்கு கவனித்துககொண்டிருப்பார்கள்.நான் சொல்வது சரிதானே..ஒரு நிமிடம் மித்திரன மூடி வச்சிட்டு யோசிச்சு பாருங்க...என்னங்க நான் சொன்னது சரியா இருக்கா?ஒரு வேலைய தொடங்கிட்டு, அதுல ஒரு தோல்வின்னா அத ஓரமா ஒதுக்கிட்டுவேற வேலைய பார்க்க போ÷றாம். அந்த ஒரு தோல்வியிலதாங்க இருக்கு நம்மவெற்றியே...தோல்விங்குறது வெற்றிக்கான ஏணிப்படின்னு எல்லாறும்தான் சொல்றாங்க...இவனும் சொல்ல வந்துட்டாங்குறீங்களா?தவறு செய்துட்டோமே தோல்வி அடைஞ்சிட்டோமே என்று நினைக்கவேகூடாது. தவறு செய்றது மனிதனின் சுபாவம். ஆனால் செய்த தவறையே மீண்டும் செய்தால்...அய்யோ அது பாவம்.தோல்விங்குறது இயல்பு. ஆனா புத்திசாலித் தனமான தோல்வி வெற்றிக்குவழி வகுக்குங்கிறத புரிஞ்சிக்கிட்டா தோல்வியப்பார்த்து பயப்படவேண்டியதில்ல.விழுந்திட்டியா... பரவாயில்லை. திருப்பி எழு... நூறாவது படியில இருந்துவிழுந்தா எழுந்து இருநூறாவது படி வரைக்கும் இந்த முற ஏறு.அதுதான் வெற்றிபுகழோங்கிய பெருமைங்குறது விழாம இருப்பதில இல்லை. விழுந்த ஒவ்வொரு சமயத்திலும் மீண்டும் எழுந்து அந்த இலக்க நோக்கி ஓடுரதுலத்தான்இருக்கு.சரி இன்னும் சில இலவசமான கசப்புகளோடு சந்திப்போம்.என்னது இலவசமான கசப்புன்னுதானே யோசிக்கிறீங்க. அதாங்க அட்வைஸ்.இந்த அட்வைஸ் கசக்குங்குறது எனக்கும் தெரியுமுங்க

துன்ப லோகம்...

நிலா புறப்பட்டு விட்டது. காதலர்கள் வீட்டு மாடியில் நிலா முற்றத்தில் அமர்ந்து களகளப்பாக கதை பேசுகிறார்கள். அவர்களுடைய இன்பத்தை இரட்டிப்பாக்கிறது நிலா. ஆனால் காதலியை அடையப் பெறாமல் தவிக்கும் இவனுக்கு நிலா நெறுப்பை கொட்டுகிறது. உலகத்துக்கெல்லாம் ஒரு நிலா. எனக்கு ஒரு நிலாவா? (எனக்கு மட்டும் சுடு நிலா என்று வைரமுத்து சொன்னது போல...) வாடைக் காற்று வீசத் தொடங்குகிறது. மற்ற வீடுகளில் காதலர்கள் குளிர்காற்றின் கொடுமையை அன்பணைப்பில் போக்கிக் களிக்கிறார்கள். ஆனால் தனிமையில் தத்தளிக்கும் இவன் என்ன செய்வான்... படுக்கைக்கு போய்ப் படுத்தாள். உறக்கம் எங்கே வரும், இந்த படுக்கையில் பிறர் படுத்தால் சுகமாக நித்திரை வரும்? நித்திரை வராவிட்டாலும் படுத்திருக்கும் நேரம் இன்பமாக இருக்கும். ஆனால் இவன் விஷயத்தில் அப்படியல்ல... உலகத்துக்கெல்லாம் ஒரு படுக்கையாகவும் இவனுக்கு மட்டும் ஒரு படுக்கையாகவும் இருக்கிறது...
மொத்தமாக பார்த்தால் மற்றவர்களுடைய உலகம் வேறு... இவனுடைய உலகம் வேறாக இருக்கிறது. மற்றவர்களுடைய உலகம் இன்பலோகம்... இவனுடையதோ துன்ப லோகம்... இவன் பிறந்ததால் உலகமே இரண்டாகிவிட்டது....

காவியா... பாவியா...

காசு தந்தால்
கடவுளைக் காணும்
வழியைக் காட்டுவதாய்
தானே பேச்சு
பிறகு எதற்கு
கற்பையும் கேட்கிறாய்...


நித்தியானந்தா சுவாமிகளின் செக்ஸ் லீலைகள் வெளிவந்த சமயம்.... கடித்த ஒரு மூட்டை பூச்சி இது...


முதல் கடுப்பு